/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிமகன்கள் தொல்லையால் போடியில் பெண்கள் அச்சம்
/
குடிமகன்கள் தொல்லையால் போடியில் பெண்கள் அச்சம்
ADDED : ஆக 07, 2024 05:27 AM
போடி, : போடி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வினோபாஜி காலனி செல்லும் ரோடு வரை குடிமகன்களின் தொந்தரவு அதிகரித்து வருவதால் பெண்கள் நடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர்.
போடி பழைய பஸ் ஸ்டாண்ட், கருப்பசாமி கோயில் தெரு, வினோபாஜி காலனி செல்லும் ரோடானது கோயில், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் முக்கிய பாதையாக உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட், பி.ஹைச்., ரோடு, வினோபாஜி காலனி செல்லும் ரோட்டில் டாஸ்மாக், மது பார்களும் உள்ளன. காலை முதல் இரவு வரை மதுபிரியர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. மாலை 6 மணிக்கு மேல் மது பிரியர்கள் போதையில் கூட்டமாக நின்றும், டூவீலரை வேகமாக ஓட்டியும் வருகின்றனர்.
பள்ளி, டியூஷன்,வேலைக்கு சென்று திரும்பும் பெண்களை இவர்கள் கேலி செய்வதும், பின் தொடர்ந்து செல்வதும் அதிகரித்து வருகிறது.
இதனால் இரவில் பெண்கள் பழைய பஸ் ஸ்டாண்ட், வினோபாஜி காலனி செல்லும் ரோட்டில் நடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் சமூக விரோதிகளிடம் இருந்து பெண்களை பாதுகாக்கவும் போடி டி.எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.