/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சி.ஓ.ஏ., தேர்வு ஆக.3,4ல் நடக்கிறது
/
சி.ஓ.ஏ., தேர்வு ஆக.3,4ல் நடக்கிறது
ADDED : மே 27, 2024 02:04 AM
போடி : தமிழகத்தில் 'கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன்' (சி.ஓ.ஏ.,) தேர்வு ஆக., 3,4 ல் நடக்கிறது என அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இதன் சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்டில் இளநிலை, முதுநிலைக்கான தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து, கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன் (சி.ஓ.ஏ.,) தேர்வுகள் நடைபெறும். அரசு துறைகளில் தட்டச்சர் பதவிக்கு தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் சி.ஓ.ஏ., தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தட்டச்சர் பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதனால் ஆண்டு தோறும் தட்டச்சு, சி.ஓ.ஏ., தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு 10 ம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சு தேர்வில் ஆங்கிலம் அல்லது தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
இந்நிலையில் 2024 ஆக. 3, 4ல் நடக்க உள்ள சி.ஓ.ஏ., தேர்வுக்கு வரும் ஜூன் 2 முதல் www.tndtegteonline.in என்ற ஆன்லைன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 30 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். தேர்வு முடிவுகள் செப்., 13ல் வெளியாக உள்ளது.

