/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்ச்சி பெறாதவர்களை துணைத்தேர்வில் வெற்றியடைய தயார் செய்வது அவசியம் ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை

ADDED : மே 16, 2024 06:14 AM

தேனி : 'தேனியில் நடந்த கல்லுாரி கனவு நிகழ்ச்சியில் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை துணைத் தேர்வில் வெற்றி பெற, தயார்படுத்த வேண்டும்.' என, ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் கல்லுாரி கனவு நிகழ்ச்சி நடந்தது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக கல்லுாரிகளில் உள்ள படிப்புகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை பற்றி விளக்குவதற்காக இந்நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். எஸ்.பி., சிவபிரசாத் முன்னிலை வகித்தார். ஆர்.டி.ஓ.,க்கள் முத்துமாதவன், தாட்சாயினி, சி.இ.ஓ., இந்திராணி, தேனி மேலப்பேட்டை இந்து நாடர்கள் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லுாரிகளின் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
கலெக்டர் பேசுகையில், 'மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடங்களை படித்து அடுத்த கட்டத்திற்கு தயாராக வேண்டும். படிப்பிற்காகவும், வேலை வாய்ப்பிற்காகவும் வெளி மாவட்டங்களுக்கு செல்ல தயார் படுத்தி கொள்ள வேண்டும். கட்டாயத்தின் பேரில் படிக்கக்கூடாது. நம்நாட்டில் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளது.
அரசு தொழில் துவங்க ரூ.5 கோடி வரை கடன் வழங்குகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை துணைத் தேர்விற்கு தயார் செய்து அவர்களை தேர்ச்சி பெற வைக்க வேண்டும்.', என்றார்.