/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திராட்சைக்கு உரிய விலை கிடைக்க கலந்துரையாடல் கலெக்டர் தகவல்
/
திராட்சைக்கு உரிய விலை கிடைக்க கலந்துரையாடல் கலெக்டர் தகவல்
திராட்சைக்கு உரிய விலை கிடைக்க கலந்துரையாடல் கலெக்டர் தகவல்
திராட்சைக்கு உரிய விலை கிடைக்க கலந்துரையாடல் கலெக்டர் தகவல்
ADDED : பிப் 23, 2025 04:31 AM
தேனி, : திராட்சைக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள், வியாபாரிகள் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் கம்பம், சின்னமனுார், உத்தமபாளையத்தில் சுமார் 1710 எக்டேரில் திராட்சை சாகுபடி செய்யப்பட்டுகிறது.
இதில் மஸ்கட் எனும் பன்னீர் திராட்சை ரகம் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இவை வெளி மாவட்டங்கள் , கேரள வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது. தட்பவெப்பநிலை காரணமாக டிசம்பர் முதல் பிப்., வரை இத்திராட்சை வரத்து குறைவாக இருக்கும். இச்சமயத்தில் மஹாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி திராட்சைகள் உள்ளூர் ரகத்தின் விலை அல்லது குறைவாக விற்பனையாகிறது.
இறக்குமதி செய்யப்படும் திராட்சை வரத்து மார்ச் முதல் வாரம் வரை இருக்கும்.
அதன்பின் உள்ளூர் திராட்சை கொள்முதல்,விலையேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். உள்ளூர் திராட்சை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள், வியாபாரிகள் இடையே கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

