/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்ல கலெக்டர் உத்தரவு
/
பெரியகுளம் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்ல கலெக்டர் உத்தரவு
பெரியகுளம் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்ல கலெக்டர் உத்தரவு
பெரியகுளம் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்ல கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 05, 2024 04:54 AM
தேனி : பெரியகுளத்தில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் ஷஜீவனா பஸ் ஸ்டாண்டிற்குள் அனைத்து பஸ்களும் சென்று வர நடவடிக்கை எடுக்க போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் உள்ள சில பஸ் ஸ்டாண்டுகளை அரசு பஸ்கள் புறக்கணித்து செல்வதாக பொதுமக்கள், பயணிகள் புகார் கூறி வந்தனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் பெரியகுளம் பகுதியில் இரவில் கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல், அரசு போக்குவரத்து கழக டெப்போ முன் இறக்கி விட்டு சென்றன. அந்த பஸ் டிரைவர், கண்டக்டர்களை பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல அறிவுறுத்துமாறு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பெரியகுளம் டெப்போ முன் போக்குவரத்து இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தவிட்டார்.