/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லுாரியில் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம்
/
கல்லுாரியில் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம்
கல்லுாரியில் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம்
கல்லுாரியில் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம்
ADDED : ஜூலை 08, 2024 12:05 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் வேலை வாய்ப்புத்துறை சார்பில், வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரித் துணை முதல்வர் சரண்யா வரவேற்றார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரிச் செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர்கள் செண்பகராஜன், அருண், கல்லுாரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் சுசீலா, கோமதி, உமாகாந்தி, கிருஷ்ணவேணி, விடுதி காப்பாளர் உமா பேசினர்.
சென்னை ஆக்சன் டி.என்.ஏ., நிறுவன சி.இ.ஓ., கலீல்ரஹ்மான், மாலத்தீவு ரெயின்போ கன்ஸ்ட்ரக்சன் பொது மேலளார் முரளிதரன், தேனி எஸ்.டி., எக்போர்ட்ஸ் நிறுவன இயக்குனர் திலீப்பாபு, சி.இ.ஓ., சுப்புராம் வேலை வாய்ப்புகள் பற்றி பேசினர்.