ADDED : ஏப் 18, 2024 06:05 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் விளையாட்டு விழா மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமையில் நடந்தது.
கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் இணைச்செயலாளர் நவீன்ராம், கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் பேசினர். ஒலிம்பிக் ஜோதியை பத்ரகாளியம்மன் கோயில் தேவஸ்தான செயலாளர் சுப்புராம், தேசியகொடியை துணைத்தலைவர் கணேஷ், ஒலிம்பிக் கொடியை பொதுச்செயலாளர் ஆனந்தவேல், கல்லுாரி கொடியை பொருளாளர் பழனியப்பன் ஏற்றினர். விளையாட்டு ஜோதியை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தான செயலாளர் ராமர் பாண்டியன் ஏற்றினார். ராணுவ தடகள பயிற்சியாளர் ராம்குமார், 'விளையாட்டு வீரர்களுக்கான மத்திய,மாநில அரசு வேலைவாய்ப்புகள், விளையாட்டு பயிற்சி பற்றி' பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கான 100 மீ, 400மீ., குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

