/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில ரோலர் ஸ்கேட்டிங்கில் கல்லூரி மாணவர் சாதனை
/
மாநில ரோலர் ஸ்கேட்டிங்கில் கல்லூரி மாணவர் சாதனை
ADDED : ஆக 04, 2024 06:17 AM

உத்தமபாளையம் : சென்னை மேடவாக்கத்தில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது.
தேனி, மதுரை, கோவை, சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவர் சஞ்சித் கண்ணா 500 மீட்டர் ரிங் ரேஸ் போட்டியில் இரண்டாவது இடத்தையும், 3 ஆயிரம் மீட்டர் ரோடு ரேஸ் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்று பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றார்.
சாதனை மாணவரை கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் தர்வேஸ் முகைதீன், ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான் , முதல்வர் எச். முகமது மீரான் பரிசு வழங்கி பாராட்டினார்கள். பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலியும் பாராட்டப் பட்டார்.