/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய வேலை உறுதி திட்டத்தில் இயந்திரங்கள் பயன்பாடு என புகார்
/
தேசிய வேலை உறுதி திட்டத்தில் இயந்திரங்கள் பயன்பாடு என புகார்
தேசிய வேலை உறுதி திட்டத்தில் இயந்திரங்கள் பயன்பாடு என புகார்
தேசிய வேலை உறுதி திட்டத்தில் இயந்திரங்கள் பயன்பாடு என புகார்
ADDED : செப் 07, 2024 06:59 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் பழைய கோட்டை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இயந்திரங்களை பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஊராட்சியில் 300க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர்.
வண்டியூர் அருகே வெள்ளப்பாறை பகுதியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணியில் இயந்திரங்களைக் கொண்டு பணிகளை துவக்கினர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இப்பகுதியைச் சேர்ந்த காரணமூர்த்தி கூறியதாவது: ஊராட்சியில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பண்ணை குட்டை அமைத்தல், ஊரணி, குளங்கள்,தூர்வாருதல், கரை அமைத்தல் போன்ற பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து ஒன்றிய நிர்வாகத்திற்கும், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
ஊராட்சியில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பதிவு செய்த பயனாளிகளுக்கு வேலைக்கான உத்தரவு பெற்று அதனை தவறாக பயன்படுத்தி இயந்திரங்கள் மூலம் ஊராட்சி மேற்கொண்ட பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.