/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீர்நிலையை சேதப்படுத்தி காற்றாலை அமைப்பதாக புகார்
/
நீர்நிலையை சேதப்படுத்தி காற்றாலை அமைப்பதாக புகார்
ADDED : செப் 05, 2024 04:04 AM
தேனி : ஆண்டிபட்டி தாலுகா கண்டமனுார் ஊராட்சி துணைத் தலைவர் சங்கிலியம்மாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் ஊராட்சியில் 32 ஏக்கர் பரப்பிலான புதுக்குளம் கண்மாய் உள்ளது. இதற்கு தண்ணீர் செல்லும் ஓடையில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் முறையாக அனுமதி பெறாமல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்க நீர்நிலைகளை சேதப்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் புகாரில் வார்டு உறுப்பினர்களும், நானும் சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்து ஆக., 31ல கண்டமனுார் போலீசில் புகார் அளித்துள்ளேன். சட்டம் ஒழுங்கு பிரச்னை நடக்கும் முன், அப்பகுதியை அளவீடு செய்து, காற்றாலை நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். இம்மனுவை துணைத் தலைவர், எஸ்.பி., அலுவலகத்தில் வழங்கினார்.