சி.என்.ஆர்., காம்ப்ளக்ஸ், திருமண மண்டபம் திறப்பு விழா
சி.என்.ஆர்., காம்ப்ளக்ஸ், திருமண மண்டபம் திறப்பு விழா
ADDED : செப் 13, 2026 06:11 PM
கம்பம், செப். 14
கம்பம் எல்.எப்.,ரோடு சி.என்.ஆர்., காம்ப்ளக்ஸ், ரெசிடன்சி, திருமண மண்டபம் திறப்பு விழா நேற்று நடத்தது.
விழாவிற்கு உரிமையாளர் நாகராஜன் தலைமை வகித்தார். நாகரத்தினம் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குநர்கள் பாலகுருநாதன், நிவேதா வரவேற்றனர். திருமண மண்டபத்தை முன்னாள் எம்.எல்.ஏ.,- ராமகிருஷ்ணன், ஆர்.ஆர்., இன்டர்நேசனல் பள்ளி சேர்மன் ராஜாங்கம் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கம்பம் நகராட்சி தலைவர் வனிதா, அட்வகேட் நெப்போலியன், முன்னாள் நகராட்சி தலைவர்கள் ராஜமணி, சிவக்குமார், இளங்கோவன், விவசாய சங்க தலைவர் நாராயணன், பரவு காவல் தலைவர் குமரேசன், சி.பி.யூ பள்ளி தாளாளர் திருமலை சுதாகரன், நகர் தி.மு.க செயலாளர்கள் வீரபாண்டியன், பால் பாண்டி ராஜா, தொழிலதிபர்கள் முத்துராமலிங்கம், தர்மலிங்கம், பரமானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை அனுமந்தன்பட்டி அ.தி.மு.க. செயலாளர் மார்க்கண்டன் ஒருங்கிணைத்தார்.
