/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டப்படும் கான்கிரீட் கலவை
/
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டப்படும் கான்கிரீட் கலவை
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டப்படும் கான்கிரீட் கலவை
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டப்படும் கான்கிரீட் கலவை
ADDED : மே 13, 2024 07:03 AM

தேனி : மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கான்கிரீட் கலவைகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.
தேனி மாவட்டத்தில் கொச்சி தனுஷ்கோடி நெடுஞ்சாலை மாவட்ட தலைநகர் வழியாக செல்கிறது. இந்த சாலை போடி மெட்டில் துவங்கி ஆண்டிப்பட்டி கணவாய் வரை 90 கி.மீ., துாரம் அமைந்துள்ளது. இந்த ரோட்டின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்துள்ளனர். சில இடங்களில் மரங்கள் நன்றாக வளர்ந்துள்ளன. கான்கிரீட் தயார் செய்யும் தனியார் நிறுவனங்கள் வாகனங்களில் கான்கீரிட் கொண்டு சென்று விட்டு எஞ்சிய கான்கிரீட் கழிவுகள், கட்டட இடிபாடுகளை ரோட்டோரத்தில் கொட்டி செல்கின்றன. இதனால் ரோட்டோரத்தில் டூவீலர்களில் செல்வோர் தடுமாறி விழும் நிலை உள்ளது.
குன்னுார் ஆற்றுப்பாலம், முத்துத்தேவன்பட்டி ரவுண்டானா முதல் போடி விலக்கு வரை உள்ள பகுதிகளில் ரோட்டின் இருபுறமும் கான்கிரீட் கழிவுகள், கட்டட இடிபாடுகள், குப்பை கொட்டப்பட்டுள்ளன. ரோட்டின் ஓரங்களில் சேர்ந்துள்ள மணலை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.