ADDED : ஜூலை 07, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஆண்டிபட்டி எஸ்.ஐ., பிரபா மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
ஆண்டிபட்டி - வைகை ரோடு சந்திப்பில் சந்தேகப்படும்படி இருந்த இருவரை பிடித்து விசாரித்தனார்.
விசாரணையில் அவர்கள் பெரியகுளம் மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் 53, வீர சின்னம்மாள் புரத்தைச் சேர்ந்த பாலமுருகன் 41, என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் தங்கம் 50 என்று எழுதப்பட்ட சீட்டுகள் 270, நல்ல நேரம் 100 எழுதப்பட்ட சீட்டுகள் 46, குமரன் 200 என்று எழுதப்பட்ட சீட்டுகள் 34 என மொத்தம் 350 சீட்டுகளை போலீசார்பறிமுதல் செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.