/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
/
பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 08, 2024 05:06 AM

தேனி, : தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
இத்தேர்வில் பள்ளி மாணவி மேகவர்ஷினி 583 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். மாணவி ரித்தியா 572 மதிப்பெண்கள், ரேவதி 558 மதிப்பெண்கள் பெற்று 2, 3ம் இடங்களை பிடித்துள்ளனர். மாணவி ரித்தியா, மாணவர் மாதேஷ் கணினி அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். வேதியியல் தேர்வில் 10 மாணவர்கள், தமிழில் 9, கம்யூட்டர் சயின்ஸில் 8, கணிதம், இயற்பியல் தேர்வுகளில் தலா 7, தாவரவியல், விலங்கியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் தேர்வில் தலா ஒருவர் என 45 பேர் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இதில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவர்கள், 500க்கு மேல் 25 பேர், 450க்கு மேல் 49 பேர், 400 மதிப்பெண்ணுக்கு மேல் 65 மாணவர்கள் பெற்றுள்ளனர்.மாணவர்களை தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, துணைத் தலைவர் பாண்டியராஜன், செயலாளர் மகேஸ், பொருளாளர் ரெங்கராஜ், நிர்வாககுழு உறுப்பினர் ராஜமன்னார், பள்ளிச் செயலாளர் ஸ்ரீனிவாசன், இணைச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் கண்ணன், பள்ளி முதல்வர் மீனாகுமாரி, துணை முதல்வர்கள் முருகன், ராம்குமார், ஆசிரியர்கள் மாணவர்கள் வாழ்த்தினர்.

