ADDED : ஜூன் 06, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு, : இடுக்கி லோக்சபா தொகுதியில் காங்., கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றதால் மூணாறில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
காங்., கூட்டணியில் போட்டியிட்ட 'சிட்டிங்' எம்.பி. டீன்குரியா கோஸ் வெற்றி பெற்றார். அதனால் மூணாறில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி,ஊர்வலம் சென்று கொண்டாடினர். அப்போது எம்.பி.யின் 'கட் அவுட்' க்கு தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்தனர். காங்., மாவட்ட பொது செயலாளர் முனியாண்டி, மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராஜ், ஒன்றிய தலைவர் விஜயகுமார், மண்டல தலைவர் நெல்சன், ஐ.என்.டி.யு.சி. வட்டார தலைவர் குமார், மூணாறு ஊராட்சி தலைவர் தீபா, துணை தலைவர் பாலசந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.