/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
/
தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
ADDED : ஏப் 12, 2024 06:19 AM

மூணாறு: இடுக்கி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு தேவையான ஓட்டு பதிவு இயந்திரங்கள் நேற்று பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
கேரளாவில் லோக்சபா தேர்தல் ஏப்.26 ல் நடக்கிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இடுக்கி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் உள்பட ஓட்டு பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் பலத்த பாதுகாப்புடன் நேற்று கொண்டு செல்லப்பட்டன.
இடுக்கி லோக்சபா தொகுதிக்கு தேவையான 1202 ஓட்டு பதிவு இயந்திரங்கள், 1202 கண்ட்ரோல் யூனிட், 1300 வி.வி. பாட் உள்பட தேவையான பொருட்கள் சட்டசபை தொகுதி வாரியாக வாகனங்களில் பாதுகாப்புடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சப் கலெக்டர்களான அருண் எஸ். நாயர், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வாகனங்களை கலெக்டரும், தேர்தல் நடத்தும்அதிகாரியுமான ஷீபாஜார்ஜ் கொடி அசைத்து அனுப்பி வைத்தார். மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தின்
கன்ட்ரோல் யூனிட் 20 சதவிகிதம், வி.வி. பாட் 30 சதவிகிதம் கூடுதலாக கொண்டு செல்லப்பட்டன. அவை அனைத்தும் தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் பாதுகாக்கப்பட்டு ஏப்.25ல் வினியோகிக்கப்படும்.

