/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல் கொள்முதலை தவிர்க்கும் நுகர்பொருள் வாணிப கழகம்
/
நெல் கொள்முதலை தவிர்க்கும் நுகர்பொருள் வாணிப கழகம்
நெல் கொள்முதலை தவிர்க்கும் நுகர்பொருள் வாணிப கழகம்
நெல் கொள்முதலை தவிர்க்கும் நுகர்பொருள் வாணிப கழகம்
ADDED : ஜூலை 24, 2024 06:04 AM
தேனி : பெரியகுளம் மேல்மங்கலத்தில் விவசாயிகளிடமிருந்து நுகர்பொருள் வாணிப கழகம் 60 மூடைக்கு மேல் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் அவதி அடைவதாக கலெக்டரிடம் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜபாண்டியன் மனு வழங்கினார்.
அவர் மனுவில், பெரியகுளம் தாலுகா மேல்மங்கலம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நெல் அறுவடை நடந்து வருகிறது. இதனை நுகர்பொருள் வாணிப கழத்தினர் அமைத்துள்ள கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வழங்குகின்றனர். விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 80 சிப்பம் வரை நெல் அறுவடை செய்கின்றனர்.
ஆனால் கொள்முதல் நிலையத்தில் ஒரு விவசாயிடம் 60 சிப்பத்திற்கு மேல் கொள்முதல் செய்வதில்லை என்கின்றனர். கொள்முதல் நிலையத்திற்கு தினமும் 1200 சிப்பம் வரை வருகிறது. ஆனால் 800 சிப்பம் மட்டும் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் சிரமமடைகின்றனர். உரிய தீர்வு காண வேண்டும் என கோரியுள்ளார்.