/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க ஆலோசனைக்கூட்டம்
/
நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க ஆலோசனைக்கூட்டம்
ADDED : ஆக 30, 2024 05:58 AM

தேனி : தேனியில் மாவட்ட அளவிலான நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் கணேஷ்ராம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலைவகித்தார். மாநில தலைவர் பேசுகையில், 'வினியோகஸ்தர்கள் நேரம் தவறாமை, சுயஓழுக்கத்துடன் தொழில் செய்ய வேண்டும். எப்போதும் கணக்குகளை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
தொழில் மேம்பாட்டிற்காக உழைக்க வேண்டும். வர்த்தக முதலீடு, தொழிலாளர்கள் மேலாண்மையை சரிவர பார்த்துக்கொள்ள வேண்டும்,' என்றார்.
கூட்டத்தில் நகர தலைவர் பிச்சைமணி, நகர பொருளாளர் மாரியப்பன், துணைத்தலைவர்கள் மேகவர்ணன், அருண்குமார், செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

