/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
/
கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
ADDED : ஆக 13, 2024 12:37 AM

தேனி : தேனி கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமாரை கண்டித்து கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவுறுத்தலை பின்பற்றாமல், சில ஊழியர்களை 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிசெய்ய வலியுறுத்தும் இணைப்பதிவாளரை கண்டித்து கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கடந்த வாரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலர்கள் இன்றி இணைப்பதிவாளர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
சில அலுவலர்கள் பணியில் இருந்தனர். அலுவலர்கள் விடுப்பு போராட்டத்தால் வழக்கமான அலுவக பணிகள் பாதிக்கப்பட்டது. இன்று உண்ணாவிரதம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
சங்க மாநில துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், 'மாலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. எனவே இன்று அறிவித்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளோம்,' என்றனர்.

