ADDED : மார் 25, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, : தேவாரம் சவுடம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்க கண்ணன் 44. இவர் டூவீலரில் செல்லும் போது பின் பக்கமாக வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது.
பின் தொடர்ந்து சென்று காரை நிறுத்தி என் மீது மோதி விட்டு காரைஏன் நிறுத்தாமல் வந்தாய் என தேவாரத்தை சேர்ந்த கார் டிரைவர் ஆதவனிடம் தங்கக் கண்ணன் கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த ஆதவன் காரில் வந்த மணிகண்டன், ராமகிருஷ்ணன் உட்பட 10 பேர் சேர்ந்து தங்கக் கண்ணனை அடித்து காயப்படுத்தினர். தகராறை விலக்க வந்த விக்னேஸ்வரனை செங்கலால் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர். தேவாரம் போலீசார் ஆதவன், மணிகண்டன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

