ADDED : ஜூன் 18, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
போடி, ஜூன் 19 -
போடி அருகே எரணம்பட்டியில் வாசிப்பவர் செல்வன் 42.
அப்பகுதி பவர் பிளாண்டில் மேலாளராக பணியாற்றி வருகிறார். பவர் பிளாண்டிற்கு தேவையான ரூ.ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்பு உள்ள 2000 மீட்டர் நீளம் உள்ள காப்பர் வயரை பவர் பிளாண்ட் பகுதியில் வைத்து இருந்தார். நேற்று முன்தினம் காப்பர் வயருடன் கூடிய டிரம் காணாமல் போனது தெரிந்தது. செல்வன் புகாரில் காப்பர் வயர் திருடிய வழக்கில் போடி கரையாம்பட்டியை சேர்ந்த ரவிவர்மன் 24, யை போடி தாலுகா போலீசார் கைது செய்தனர். உடன் இருந்தவர்களை தேடி வருகின்றனர்.
