ADDED : செப் 02, 2024 12:15 AM
தேனி : தேனி உழவர் சந்தையில் கொத்தமல்லி இலை வரத்து குறைவால், இதன் விலை பத்து நாட்களில் இருமடங்காக விலை ரூ.150 என உயர்ந்துள்ளது.
கொத்தமல்லி இலை ரசம், துவையல் என சமையலில் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் சின்னமனுார், சீலையம்பட்டி, தேவாரம் பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதே நிலையில் ஆக.,28ல் கிலோ ரூ.75க்கும், நேற்று ரூ.65க்கும் விற்பனை ஆனது.
உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், 'கோடை காலத்தில் கொத்தமல்லி சாகுபடி இருக்காது. இதனால் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வரும். அப்போது விலை கூடுதலாக இருக்கும். மாவட்டத்தில் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. தற்போது வரத்து குறைந்துள்ளதால் மீண்டும் விலை உயரத் துவங்கி உள்ளது.', என்றார்.