/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுாரில் குடிநீர் சப்ளையில் குளறுபடி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
/
கூடலுாரில் குடிநீர் சப்ளையில் குளறுபடி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
கூடலுாரில் குடிநீர் சப்ளையில் குளறுபடி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
கூடலுாரில் குடிநீர் சப்ளையில் குளறுபடி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
ADDED : மார் 02, 2025 05:20 AM
கூடலுார்: கூடலுாரில் குடிநீர் சப்ளையில் குளறுபடி ஏற்படுத்துவதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
கூடலுார் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் பத்மாவதி (தி.மு.க.,)தலைமையில், கமிஷனர் கோபிநாத் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் அதிகமான கவுன்சிலர்கள் குடிநீர் சப்ளையில் குளறுபடி ஏற்படுத்துவதாக அலுவலர்கள் மீது குற்றம் சாட்டினர்.
சமயன்: லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து நகராட்சிக்கு தனியாக ஒப்படைப்பு செய்தும் குடிநீர் சப்ளையில் குளறுபடி ஏற்பட்டு வருகிறது. இரவில் குடிநீர் திறப்பதால் பயனற்ற நிலை ஏற்படுகிறது.
லோகந்துரை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்துள்ளதால் 70 சதவீத குடிநீர் மட்டுமே சப்ளையாகிறது. பொறுப்பு பதவி வகிக்கும் கமிஷனரும், நகராட்சி பொறியாளரும் அடிக்கடி வந்து அத்யாவசிய தேவையாக உள்ள குடிநீர் பிரச்னையை கண்காணிக்க வேண்டும்.
காந்தாமணி: வார்டுகளில் குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ள நிலையில் கவுன்சிலர்களுக்கு என்ன வேலை என கேட்கின்றனர்.
தேன்மொழி மேட்டுக்குளம் குடியிருப்பு பகுதியில் மண் ரோடு அதிகம் உள்ளது.
கணேசன்: தெருக்களில் நடந்து கூட செல்ல முடியாத வகையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.
கலாமணி: வீட்டு வரி வசூலிப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.
கமிஷனர்: குடிநீர் கட்டணம், வீட்டு வரி நூறு சதவீதம் வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. குறைவாக வசூல் ஆவதால் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடும் குறைவாக உள்ளது. இதனால் அனைத்து கவுன்சிலர்களும் ஒருங்கிணைந்து 100 சதவீத வரி வசூல் செய்ய ஒத்துழைப்பு தர வேண்டும்
தீர்மானம்: ஆடு அடிக்கும் தொட்டிக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திலிருந்து சுற்றுச்சூழல் அனுமதியை புதுப்பிப்பது, மழைநீர் வடிகால் அமைப்பது, திடக்கழிவு மேலாண்மை பணிக்காக கழிவுநீர் அகற்றும் வாகனம் வாங்குவது உள்ளிட்ட 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.