/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'ஆசிட்' வீசியதால் கள்ளக்காதலர்கள் காயம்; முன்னாள் கள்ளக்காதலர் கைது

ADDED : ஏப் 24, 2024 12:18 AM

மூணாறு : மூணாறு அருகே நெருக்கத்தில் இருந்த கள்ளக் காதலர்கள் மீது முன்னாள் கள்ளக் காதலர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் பாம்புகயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷான்குமார் 54.
இவருக்கு அதே பகுதியில் கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த 49 வயது பெண்ணுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதனிடையே அந்த பெண் ஷான்குமாரை விட்டு விலகி ஆலுவா பகுதியைச் சேர்ந்த 40 வயது நபருடன் நெருங்கி பழகி வந்தார். அதனால் ஆத்திரம் அடைந்த ஷான்குமார் இருவரையும் பழி வாங்க திட்டமிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் சம்பந்தப்பட்ட பெண் வீட்டில் நெருக்கத்தில் இருந்த போது, மேல் கூரை வழியாக ஷான்குமார் ஆசிட்டை வீசினார்.
அதில் பலத்த காயமடைந்த இருவரும் களமசேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் ஷான்குமாரை கைது செய்தனர்.