/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காயத்தால் அவதிப்படும் காட்டு யானை சிகிச்சை அளிக்க நீதிமன்றத்தில் வழக்கு
/
காயத்தால் அவதிப்படும் காட்டு யானை சிகிச்சை அளிக்க நீதிமன்றத்தில் வழக்கு
காயத்தால் அவதிப்படும் காட்டு யானை சிகிச்சை அளிக்க நீதிமன்றத்தில் வழக்கு
காயத்தால் அவதிப்படும் காட்டு யானை சிகிச்சை அளிக்க நீதிமன்றத்தில் வழக்கு
ADDED : மார் 09, 2025 02:46 AM

மூணாறு: கேரளா மூணாறில் காலில் பலத்த காயத்துடன் ஒரு மாதமாக சுற்றித் திரியும் ஒற்றை கொம்பன் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் வயது முதிர்ந்த படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். அது போன்று ஒரு தந்தத்தைக் கொண்ட இரண்டு ஒற்றை கொம்பன் காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன.
அவை படையப்பாவுடன் அடிக்கடி மோதிக் கொள்கின்றன. கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் பிப்.5ல் ஒரு ஒற்றை கொம்பன், படையப்பா மோதிக் கொண்டன. அதில் ஒற்றை கொம்பனுக்கு முன் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மூணாறு ஊராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கிற்கு பிப்.15ல் ஒற்றை கொம்பன் வந்தபோது காலில் ஏற்பட்ட ஆழமான காயம் தெரியவந்தது.
சிகிச்சை அளிப்பது குறித்து வனத்துறையினர் ஆலோசித்தனர். ஆனால் மேல்நடவடிக்கை இல்லாததால் ஒரு மாதமாக காயத்துடன் சுற்றித்திரிகிறது. இந்த யானைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என டபிள்யூ. ஈ.எப்.ஏ.ஏ. என்ற வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பினர் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நாளை (மார்ச் 10) விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே வனத்துறை கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அனுராஜ் தலைமையில் நான்கு டாக்டர்கள் குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.