/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் தேசிய நெடுஞ்சாலை தினசரி சந்தையால் நெருக்கடி
/
ஆண்டிபட்டியில் தேசிய நெடுஞ்சாலை தினசரி சந்தையால் நெருக்கடி
ஆண்டிபட்டியில் தேசிய நெடுஞ்சாலை தினசரி சந்தையால் நெருக்கடி
ஆண்டிபட்டியில் தேசிய நெடுஞ்சாலை தினசரி சந்தையால் நெருக்கடி
ADDED : ஆக 25, 2024 05:15 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் வியாபாரிகள் தேசிய நெடுஞ்சாலையை சந்தை களமாக பயன்படுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. போலீசார் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் அன்றாடம் வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.
கொச்சி --- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி பேரூராட்சி எல்லை, தாலுகா அலுவலகம் முதல் கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்ட் வரை உள்ளது. ஆண்டிபட்டியை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். ஒன்றரை கி.மீ., தூரத்தில் 500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. ரோட்டின் ஓரத்தில் நிரந்தர கடை வைத்திருப்பவர்கள் தேசிய நெடுஞ்சாலை வரை கடையை நீட்டிப்பு செய்கின்றனர். சரக்கு வாகனங்கள் ஆட்டோக்களை ரோட்டில் நிறுத்தி பலரும் அன்றாட பணிகளை ரோட்டில் தொடர்வதால் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. ரோட்டில் ஓரங்களில் பொருட்களை பரப்பி கடைகளை அமைப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து வசதிக்காக அகலப்படுத்தப்பட்ட இடங்களை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துவது குறித்து பேரூராட்சி அதிகாரிகள், போலீசார் கண்டு கொள்ளவில்லை. சரக்கு வாகனங்களில் பொருட்களைக் கொண்டு வந்து ரோட்டில் வரிசையாக நிறுத்தி ஒலி பெருக்கி மூலம் விளம்பரம் செய்து பொருட்களை விற்பனை செய்வதால் பலருக்கும் எரிச்சல் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையை தினசரி சந்தை களமாக பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். சாலை ஓர வியாபாரிகள் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத இடங்களில் கடையில் அமைக்க அறிவுறுத்த வேண்டும்.

