/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தினமும் வார்டுகளில் ஓட்டு சேகரிப்பு: வேகம் எடுக்கும் தி.மு.க.தேர்தல் பணி

ADDED : ஏப் 13, 2024 02:28 AM
கம்பம் : வார்டுக்கு 50 பேர் தினமும் ஓட்டு சேகரிக்க செல்ல வேண்டும் என கூறி தேர்தல் பணிகளில் தி.மு.க. திடீர் வேகம் காட்டத் துவங்கியுள்ளது.
தேனி தொகுதி தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். பிரசாரம் முழு வீச்சில் நடைபெறுகிறது. ஒவ்வொரு நகரங்களிலும் நகர செயலாளார்கள் தலைமையில் தினமும் ஒரு வார்டு என பிரசாரம் செய்து வந்தனர். அ.தி.மு.க. அ.ம.மு.க. பிரசாரம் உச்சத்தில் இருப்பதாக உளவுத் துறை தி.மு.க.,வை எச்சரித்துள்ளது. தேனியில் முதல்வர் பேசி சென்ற பின் தி.மு.க. வின் பணிகளில் வேகம் தெரிகிறது. குறிப்பாக தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் திறந்த ஜீப்பில் கிராமங்களில் ஆதரவு திரட்டி வருகிறார்.
நகர் பகுதிகளில் ஒவ்வொரு வார்டுக்கும், அந்த வார்டை சேர்ந்த 50 பேர்கள் தினமும் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கம்பம் தெற்கு செயலாளர் பால்பாண்டி ராஜா தலைமையில் தினமும் மாலையில் வார்டுகளில் பிரசாரம் நடைபெறுகிறதா என்று கண்காணிப்பும் நடைபெறுகிறது . இதே போன்று அனைத்து நகரம், பேரூர்களில் தி.மு.க. திடீர் வேகம் எடுத்துள்ளது.