/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எஸ்.எஸ்.,புரம் - ரங்கசமுத்திரம் ரோடு சேதம்
/
எஸ்.எஸ்.,புரம் - ரங்கசமுத்திரம் ரோடு சேதம்
ADDED : ஆக 08, 2024 05:38 AM
ஆண்டிபட்டி: சண்முகசுந்தரபுரத்திலிருந்து ஜம்புலிப்புத்தூர் கண்மாய்க்கரை வழியாக ரங்கசமுத்திரம் செல்லும் ரோட்டை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த ரோடு பல இடங்களில் குண்டும், குழியுமாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த ரோடு வழியாக பஸ் போக்குவரத்து இல்லை. இருப்பினும் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்லவும், சண்முகசுந்தரபுரத்திலிருந்து ஜம்புலிப்புத்தூர், ரங்கசமுத்திரம், லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம், அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டி வைகை அணை ஆகிய பகுதிகளுக்கு எளிதில் சென்று வருகின்றனர்.
கேபிள் பதிப்புக்காக ரோட்டின் ஓரங்களில் தோண்டிய பள்ளத்தை சரி செய்யாததால் ரோடு பல இடங்களில் சரிந்துள்ளது. இரவில் செல்லும் வாகனங்களுக்கு விபத்து ஏற்படுத்துவதாக உள்ளது.
2 கி.மீ., தூரம் உள்ள இந்த ரோட்டை சீரமைக்கவும், தேவையான இடங்களில் தடுப்புச் சுவர் கட்டவும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.