/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதமடைந்த ரோடு சீரமைப்பு; இந்திய கம்யூ., தடுத்து நிறுத்தம்
/
சேதமடைந்த ரோடு சீரமைப்பு; இந்திய கம்யூ., தடுத்து நிறுத்தம்
சேதமடைந்த ரோடு சீரமைப்பு; இந்திய கம்யூ., தடுத்து நிறுத்தம்
சேதமடைந்த ரோடு சீரமைப்பு; இந்திய கம்யூ., தடுத்து நிறுத்தம்
ADDED : ஆக 17, 2024 01:21 AM
மூணாறு : சேதமடைந்த ரோட்டை அவசரகதியில் சீரமைத்ததை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்து நிறுத்தினர்.
மூணாறில் 2018 ஆகஸ்ட்டில் பெய்த கன மழையில்  சைலன்ட்வாலி ரோட்டில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு சைலன்ட்வாலி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு  மாற்று வழியில் வாகனங்கள் சென்று வந்தன.
சீரமைப்பு: மூணாறு, சைலன்ட்வாலி இடையே 21 கி.மீ., தூரம்   தார் ரோடு  சீரமைக்கப்பட்டது. அதற்கு தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜாவின் உள்ளூர் மேம்பாட்டு நிதியில் ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன.
அப்பணிகள் முடிந்து  இரண்டு மாதங்களுக்கு முன்பு ரோடு பயன்பாட்டிற்கு வந்தது.  தரமற்ற முறையில்  ரோடு பணி நடந்ததால்   பல பகுதிகளில் ரோடு சேதமடைந்தது. அதனால் ஒப்பந்ததாரர்  எதிராக எதிர்ப்புகள் வலுத்தன. ரோடு பணிகளில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துமாறு இந்திய கம்யூ., மண்டல தலைவர் சந்திரபால் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்நிலையில் ரோடு சேதமடைந்த பகுதிகளில் சீரமைக்கும் பணி நடந்தது.
அதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட பொது மக்கள் தடுத்து நிறுத்தினர்.  மீண்டும் முழுமையாக தார்ரோடு சீரமைக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.

