ADDED : செப் 07, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை குமார் தெருவைச் சேர்ந்தவர் சரவணக்குமார் 39. தேனி நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
வீட்டில் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். காலையில் சரவணக்குமார் மனைவி காமாட்சி தேவி, குளியலறையில் பார்த்தபோது சரவணக்குமார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உறவினர்கள் சரவணக்குமாரை பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் சரவணக்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தார். மனைவி புகாரில், வடகரை எஸ்.ஐ., விக்னேஷ் விசாரிக்கிறார்.