/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது
/
கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது
ADDED : ஏப் 28, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், : பெரியகுளம் தி.மு.க., கவுன்சிலர் முகமது அலிக்கு கொலை மிரட்டல் விடுத்த சதீஷ்குமார் கைதானார்.
பெரியகுளம் நகராட்சி 7 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் முகமதுஅலி 65. மேலரத வீதியைச் சேர்ந்த சதீஷ்குமார் 30. அதே பகுதியில் சாக்கடையில் கல்லை போட்டதால் அடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய சென்ற முகமது அலிக்கும், சதீஷ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக தேரடி வீதியில் நடந்து சென்ற முகமதுஅலியை, சதீஷ்குமார் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். வடகரை எஸ்.ஐ., மலரம்மாள், சதீஷ்குமாரை கைது செய்தார்.

