/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மீன் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: 9 பேர் மீது வழக்கு
/
மீன் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: 9 பேர் மீது வழக்கு
மீன் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: 9 பேர் மீது வழக்கு
மீன் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: 9 பேர் மீது வழக்கு
ADDED : மே 31, 2024 06:30 AM
போடி : வைகை அணை மீன்வளத்துறை ஆய்வாளர் கவுதமன். இவர் மீன்பாசி ஏலம் விடும் வரை போடி மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாயை பாதுகாக்கும் வகையில், போடி மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களைக் கொண்டு பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த சின்னசாமி, பிரகாஷ், வெள்ளாடு முத்துராமலிங்கம், மணிகண்டன், காமாட்சி, மாரியப்பன், ராஜா, பாஸ்கரன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்களை தகாத வார்த்தையால் பேசி வேலை செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் செய்துள்ளனர். கண்மாயில் உள்ள மீன்களை திருட்டு வலை கொண்டு பிடித்துள்ளனர். மீன்வளத்துறை ஆய்வாளர் புகாரில் போடி தாலுாகா போலீசார் சின்னச்சாமி, பிரகாஷ் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.