ADDED : ஆக 08, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே பொட்டிப்புரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் சங்கீதா 30.
இவர் தனது கணவர் வேல்முருகன், குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இதே பகுதியை சேர்ந்த சஞ்சய் காந்தி என்பவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து கல்லால் எறிந்து உள்ளார். சங்கீதா சஞ்சய் காந்தியை கண்டித்துள்ளார். ஆத்திரம் அடைந்த சஞ்சய்காந்தி இவரது தந்தை குருசாமி, அண்ணன் ராகுல் காந்தி, அக்கா ரோஜா, பிரியங்கா ஆகிய 5 பேரும் சேர்ந்து சங்கீதா, வேல்முருகனை அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். சங்கீதா புகாரில் போடி தாலுகா போலீசார் சஞ்சய்காந்தி, குருசாமி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.