/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கிராம சபையில் காரசார விவாதம்
/
முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கிராம சபையில் காரசார விவாதம்
முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கிராம சபையில் காரசார விவாதம்
முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கிராம சபையில் காரசார விவாதம்
ADDED : ஆக 16, 2024 04:50 AM

கூடலுார்: முல்லைப் பெரியாற்றில் பல ஆண்டுகளாக தொடர்ந்து கழிவு நீர் கலப்பதால் குடிநீராக பயன்படுத்தும் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக கருநாக்கமுத்தன்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது.
கூடலுார் நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முழுவதும் ஷட்ரஸ் அருகே முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது. இப்பகுதியில் அமைக்கப்பட்ட பம்பிங் ஸ்டேஷன் மூலம் நேரடியாக தண்ணீரை பம்பிங் செய்து கிராம மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தொடர்ந்து மக்களுக்கு தொற்றுநோய் பரவி வருகிறது. இதனை தடுக்க கழிவு நீர் கலக்கும் இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சில மாதங்களுக்கு முன்பு கூடலுார் நகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக நிதி வீணானது. அதனால் கழிவு நீர் தொடர்ந்து முல்லைப் பெரியாற்றில் கலந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் நேற்று கருநாக்கமுத்தன்பட்டி கிராம சபைக் கூட்டம் தலைவர் மொக்கப்பன் தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மக்கள், முல்லைப் பெரியாற்றில் கழிவு நீர் தொடர்ந்து கலந்து வருவதை உடனடியாக தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். காலதாமதம் ஏற்பட்டால் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக மக்கள் அறிவித்தனர். உடனடியாக கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தலைவர் மொக்கப்பன் தெரிவித்தார்.

