/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிப்பில் தாமதம்; : தேர்தல் அலுவலர் முற்றுகை
/
ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிப்பில் தாமதம்; : தேர்தல் அலுவலர் முற்றுகை
ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிப்பில் தாமதம்; : தேர்தல் அலுவலர் முற்றுகை
ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிப்பில் தாமதம்; : தேர்தல் அலுவலர் முற்றுகை
ADDED : ஜூன் 05, 2024 01:28 AM

தேனி : தேனி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் முதல் சுற்று முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், பத்திரிகையாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவை முற்றுகையிட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேனி லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள் கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க கல்லுாரியில் எண்ணப்பட்டது.
வளாகத்தில் 6 சட்டசபை தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் தனித்தனி மையங்களில் எண்ணி வெளியிடப்பட்டது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் காலை 7:45 மணிக்கு எடுத்து வரப்பட்டது. காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதைத்தொடர்ந்து ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை துவங்கியது.
முதல் சுற்று ஓட்டுகள் எண்ணி முடிந்தும் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரம் குறித்து 10:40 மணி வரை அறிவிக்காமல் அதிகாரிகள் தாமதப்படுத்தினர். அதே நேரத்தில் மற்ற தொகுதிகளில் ஓட்டு விபரங்கள் அடுத்தடுத்து வெளியாகின.
இதனால் பத்திரிகையாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவிக்க சென்றனர். பத்திரிகையாளர்களை தேனி டி.எஸ்.பி., பார்த்திபன் தடுத்து அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
கம்பம் சட்டசபை தொகுதி ஓட்டு எண்ணும் மையம் அருகே நின்றிருந்த தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவை பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டு, பதிவான ஓட்டு விவரங்களை சுற்றுவாரியாக விரைந்து வெளியிட வலியுறுத்தினர்.
ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலர் பத்திரிகையாளர்கள் விதிகளை மீறி அலைபேசிகள் கொண்டு வருகின்றீர்கள் என கூறி அங்கிருந்து சென்றார்.
சம்ப இடத்திற்கு வந்த ஏ.டி.எஸ்.பி.,க்கள் விவேகானந்தன், சுகுமார் பத்திரிகையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி செய்தியாளர்கள் அறைக்கு அழைத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து சுற்றுவாரியாக பதிவான ஓட்டுகள் வெளியிடப்பட்டது.