/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மக்காச்சோள சாகுபடிக்கு முன் உழவு மானியம் வழங்க கோரிக்கை
/
மக்காச்சோள சாகுபடிக்கு முன் உழவு மானியம் வழங்க கோரிக்கை
மக்காச்சோள சாகுபடிக்கு முன் உழவு மானியம் வழங்க கோரிக்கை
மக்காச்சோள சாகுபடிக்கு முன் உழவு மானியம் வழங்க கோரிக்கை
ADDED : ஆக 11, 2024 06:13 AM
தேனி : மாவட்டத்தில் மக்காச்சோள சாகுபடி செய்வதற்கு முன் நோய்தாக்குதலை தடுக்க பயிற்சி, உழுவு மானியத்தை முன்னரே வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், மாவட்டத்தில் செப்டம்பரில் அதிக அளவில் மக்காச்சோள சாகுபடி துவங்குகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக படைப்புழு தாக்கம் அதிகமாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏக்கரில் 18 முதல் 22 குவிண்டால் வரை அறுவடை செய்யப்பட்டது. தற்போது அதிகபட்சம் 12 குவிண்டால் மட்டும் அறுவடை செய்யப்படுகிறது. மக்காச்சோள சாகுபடியில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த எந்த வகை மருந்துகள் தெளிக்க வேண்டும், உழவின் போது ஏதேனும் மருந்துகள் சேர்க்க வேண்டுமா என வேளாண் துறையினர் பயிற்சி வழங்க வேண்டும்.
மேலும், மக்காச்சோள விதைகள் தரமானதாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உழவு மானியத்தை முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.

