
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கம் சார்பில்,'அங்கன்வாடிக்கு கடந்தாண்டு குறைவாக ஒதுக்கப்பட்ட ரூ.300 கோடியை விட இந்தாண்டு கூடுதல் நிதியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணிக்காக வழங்கப்பட அலைபேசிகளுக்கு பதிலாக புதிய அலைபேசிகள் வழங்க வேண்டும்', உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சாந்தியம்மாள் தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் ஜானகி, மாவட்ட செயலாளர் வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.