
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில், மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.
ஸ்மார்ட் மீட்டர் கட்டாயமாக்க கூடாது. ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ராஜதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜபாண்டி, ஜெய்சிங், பெரியகுளம் தாலுகாக்குழு செயலாளர் மோகன்ராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்று, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.