
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவியை பாலியல் துன்புறுத்தி கொலை செய்தவர்களை கண்டித்தும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் ஞானவேல், உதயசூரியன், நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.