ADDED : ஜூலை 23, 2024 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தி.மு.க., அரசை கண்டித்து அ.ம.மு.க., சார்பில் தேனி பங்களாமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை தலைமை வகித்தார். நிர்வாக தோல்வியை மறைக்க மின் கட்டணம், மறைமுக வரிகளை உயர்த்தியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன.
மாவட்ட செயலாளர்கள் காசிமாயன், முத்துச்சாமி முன்னிலை வகித்தனர். தேனி நகர செயலாளர்கள் குருகணேஷ், விஜயராஜ், ஒன்றிய, நகர, பிற அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.