ADDED : ஆக 31, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கலெக்டர் அலுவலகம் முன் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் பாலா தலைமை வகித்தார்.
பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட எருமலைநாயக்கன்பட்டியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க கோரி கோஷமிட்டனர்.
மாவட்ட தலைவர் பாலா, மேற்கு மாவட்டச் செயலாளர் பிரசாத், நிர்வாகிகள் ராமு, தங்கபாண்டியன், முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.