ADDED : ஜூலை 05, 2024 05:25 AM

தேனி: அரசு கலை கல்லுாரிகள் முன் 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கவுரவ விரிவுரையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வீரபாண்டி அரசு கலை கல்லுாரி முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமை வகித்தார்.
அரசாணை 56ன்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 2019லிருந்து மாதம் ரூ. 50ஆயிரம் வீதம் ஊதியம், அதன் நிலுவைத்தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடாக 4 சதவீதம் வழங்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர்களுக்கு இப்போது எழுத்துத்தேர்வு நடத்தக்கூடாது.
ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம், இறந்தவர்களுக்கு இழப்பீடு, மகப்பேறுமருத்துவ விடுப்பு வழங்கிட வலியுறுத்திம், 3 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க கோரியும் கோஷமிட்டனர்.
கோட்டூர் கலை, அறிவியல் கல்லுாரி முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விரிவுரையாளர் ராஜராஜன் தலைமை வகித்தார். விரைவுரையாளர்கள் சுரேஷ்குமார், மகேஸ்வரன், சுரேஷ், முத்துராஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.