/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டா இடங்களை அரசு புறம் போக்கு என மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
பட்டா இடங்களை அரசு புறம் போக்கு என மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பட்டா இடங்களை அரசு புறம் போக்கு என மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பட்டா இடங்களை அரசு புறம் போக்கு என மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 25, 2024 05:13 AM
போடி: போடியில் தனி நபர் பட்டா இடங்களை சர்க்கார் புறம்போக்கு என வருவாய் துறையினர் கணனியில் பதிவு செய்ததை கண்டித்து நா.த.க., சார்பில் தாலுகா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
போடி நகராட்சி பகுதியில் தனி நபர்களுக்கான சொந்தமான இடங்கள், வீடுகளுக்கான பட்டா ஆகியவற்றை வருவாய் துறையினர் கணினியில் பதிவு செய்யும் போது பட்டா என்பதற்கு பதிலாக சர்க்கார் புறம் போக்கு என பதிவு செய்துள்ளனர். இதனால் வீடு, இடங்கள் வைத்து இருப்பவர்கள் விற்பனை செய்யவும், வங்கியில் கடன் பெறவும் முடியாமல் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். நத்தம் புறம் போக்கு என பதிவேற்றம் செய்ததை பட்டா என மாற்றி தர பல ஆண்டுகளாக வருவாய்துறையில் மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகளிடம் கேட்டால் கணனியில் மாற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது என கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். சர்க்கார் புறம் போக்கு என்பதை பட்டா என மாற்றி வழங்க கோரி நாம் தமிழகர் கட்சி சார்பில் மண்டல பொறுப்பாளர் பிரேம் சந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், போடி நகர பொறுப்பாளர் சரவணன், நகர செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

