/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் ரேஷன் வினியோகம் பாதிப்பு கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

ADDED : செப் 06, 2024 05:44 AM

தேனி: மாவட்டத்தில் ரேஷன் பணியாளர்கள் வேலை நிறுத்ததால் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டது.
அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் சரியான எடையில் பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும், நுாறு சதவீத ஒதுக்கீடு, செயலி மூலம் ஆய்வு செய்வதை கைவிட வேண்டும், கட்டாய இறக்கு கூலி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தேனி கலெக்டர் அலுவலகம் முன் மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் ஜெயசந்திரராஜா, மாநில பொருளாளர் பொன் அமைதி, மாநில செயலாளர்கள் பாண்டி, காமாட்சி முருகன், மாவட்ட செயலாளர் அய்யனார், பொருளாளர் முத்துராயர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் உள்ள உள்ள 403 முழுநேர, 130 பகுதிநேர ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் 376 பேர் பணிபுரிகின்றனர்.
பணியாளர்கள் பேராட்டதால் 206 பேர் விடுப்பு எடுத்தனர். இதனால் 214 முழுநேர கடைகள் செயல்படவில்லை.
இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டது.