/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தாலுகா அலுவலகத்தில் துணை ஆணையர் ஆய்வு
/
தாலுகா அலுவலகத்தில் துணை ஆணையர் ஆய்வு
ADDED : மே 28, 2024 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், : பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் நிலுவையில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை வருவாய் நிர்வாக துணை ஆணையர் பொற்கொடி ஆய்வு செய்தார்.
சென்னை வருவாய் நிர்வாக துணை ஆணையர் (மகளிர் உரிமைத் திட்டம்) பொற்கொடி ஆய்வு மேற்கொண்டார். இதில் ஆன்லைனில் பட்டா கேட்டு விண்ணப்பம், பட்டா பெயர் மாற்றம், முதியோர் ஓய்வு உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, வருமானம், இருப்பிடம் உட்பட அரசின் நலத்திட்ட உதவிகள் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்தார்.
சமூக பாதுகாப்பு திட்டம் துணை தாசில்தார் முரளி, தாசில்தார் அர்ஜுனன் உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். -