/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி ரயில்வே மேம்பால பணிக்காக வாகனங்களுக்கு மாற்றுப்பாதை அறிவிப்பு
/
தேனி ரயில்வே மேம்பால பணிக்காக வாகனங்களுக்கு மாற்றுப்பாதை அறிவிப்பு
தேனி ரயில்வே மேம்பால பணிக்காக வாகனங்களுக்கு மாற்றுப்பாதை அறிவிப்பு
தேனி ரயில்வே மேம்பால பணிக்காக வாகனங்களுக்கு மாற்றுப்பாதை அறிவிப்பு
ADDED : ஜூலை 14, 2024 04:23 AM
தேனி, : தேனி மதுரை ரோட்டில் நடந்து வரும் மேம்பால பணிக்காக கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் செல்ல தனித்தனி மாற்றுப்பாதை ஜூலை 19 முதல் 28 வரை அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேனி அரண்மனைபுதுார் விலக்கு பகுதியில் இருந்து தொழிற்பேட்டை வரை ரயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது. இதனால் மதுரையில் இருந்து தேனி வழியாக போடி, கம்பம் செல்லும் பஸ்கள் தேனி அரசு ஐ.டி.ஐ., திட்டசாலை, புதுபஸ்ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லும் மறுமார்க்த்திலும் இதே வழியை பயனபடுத்த வேண்டும்.
மதுரையில் இருந்து போடி, கம்பம் செல்லும் இலகுரக வாகனங்கள் கருவேல்நாயக்கன்பட்டி, அரண்மனைப்புதுார் விலக்கு வழியாக செல்லலாம். மறுமார்க்கத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட்,அல்லிநகரம், அன்னஞ்சி விலக்கு புது பஸ் ஸ்டாண்ட், ஐ.டி.ஐ., திட்டச்சாலை வழியாக செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் கண்டமனுார் விலக்கு, கண்டமனுார், அம்பாசமுத்திரம் விலக்கு, கோவிந்தநகரம், தப்புக்குண்டு, உப்பார்பட்டி விலக்கு வழியாகவும், மறுமார்க்கத்தில் திண்டுக்கல் பை பாஸ், வடுகபட்டி, மேல்மங்கலம், வைகை அணை ரோடு வழியாக மதுரை செல்ல வேண்டும்.
போடி, கம்பத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்ட், அல்லிநகரம், அன்னஞ்சி விலக்கு, புதுபஸ் ஸ்டாண்ட், அன்னஞ்சி விலக்கு வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரண்மனைப்புதுார் விலக்கில் இருந்து தேனி செல்லும் பஸ்கள், இலகு ரக வாகனங்கள் தற்போதைய ரோட்டினை பயன்படுத்தலாம்.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதையை மேம்பால பணிகள் முடியும் வரை பயன்படுத்தி, ஒத்துழைப்பு தருமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன், டி.எஸ்.பி., பார்த்திபன், போக்குவரத்து கழக மேலாளர் ரவிக்குமார், மாநில நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் சுவாமி நாதன், உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரம்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.