/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கி எடுத்து செல்லப்பட்ட தேவிகுளம் சட்டசபை தொகுதி மின்னணு இயந்திரங்கள்

ADDED : ஏப் 28, 2024 05:20 AM
மூணாறு : தேவிகுளம் சட்டசபைக்கு உட்பட்ட ஓட்டு பதிவு மின்னணு இயந்திரங்கள் ஓட்டு பதிவு முடிந்து நேற்று அதிகாலை 5:00 மணிக்குபைனாவ்வில் உள்ள அரசு உண்டு உறைவிடைப்பள்ளி ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இடுக்கி லோக்சபா தொகுதி ஏழு சட்டசபை தொகுதிகளை கொண்டது. தொகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. முன்னதாக சட்டசபை தொகுதிகளில் ஓட்டு பதிவு மின்னணு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.
தேவிகுளம் சட்டசபை தொகுதியில் 195 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டு பதிவு நடந்தது.
அதற்கு தேவையான மின்னணு இயந்திரங்கள் மூணாறு அரசு தொழில் பயிற்சி மேல் நிலை பள்ளியில் பாதுகாக்கப்பட்டு ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவை ஓட்டு பதிவுக்கு பின் மீண்டும் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டன. இறுதி மின்னணு இயந்திரம் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:45 க்கு வந்து சேர்ந்தது. அதன் பின் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அனைத்து மின்னணு இயந்திரங்களும் ஆறு வாகனங்களில் பலத்த போலீஸ், துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் இடுக்கி பைனாவ்வில் உள்ளஓட்டு எண்ணும் மையத்திற்கு தகுந்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.