/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி - சென்னை ரயில் அரக்கோணத்தில் நின்று செல்ல பக்தர்கள் எதிர்பார்ப்பு
/
போடி - சென்னை ரயில் அரக்கோணத்தில் நின்று செல்ல பக்தர்கள் எதிர்பார்ப்பு
போடி - சென்னை ரயில் அரக்கோணத்தில் நின்று செல்ல பக்தர்கள் எதிர்பார்ப்பு
போடி - சென்னை ரயில் அரக்கோணத்தில் நின்று செல்ல பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 10, 2025 05:45 AM
தேனி: 'போடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயிலை அரக்கோணத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, திருத்தணி, திருப்பதி செல்லும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், காட்பாடி வழியாக வாரத்தில் மூன்று நாட்கள் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் நாமக்கல் நிறுத்தத்தில் நின்று செல்லும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதே போல் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ரயிலில் பயணிகள் கூறுகையில், பள்ளிகள் கோடை விடுமுறையில் பலரும் குடும்பத்துடன் திருப்பதி, திருத்தணி உள்ளிட்ட கோயில்களுக்கு செல்ல விரும்புவார்கள்.
போடியில் இருந்து சென்னை செல்லும் ரயில் காலை 5:18 மணிக்கு காட்பாடி ரயில்வே ஸ்டேஷனை கடந்து செல்கிறது. அங்கு குறைந்தபட்சம் 2 முதல் 4 மணி நேரம் காத்திருந்தால் தான் திருப்பதி செல்ல ரயில் உள்ளது.
அதே நேரம் இந்த ரயில் காலை 6:20 மணிக்கு அரக்கோணத்தை கடந்து செல்கிறது.
ஆனால், அங்கு நிற்பதில்லை. அரக்கோணம் வழியாக திருப்பதி, திருத்தணி உள்ளிட்ட கோயில்களுக்கு தொடர்ச்சியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கோடை விடுமுறையில் குடும்பத்துடன் குறைந்த செலவில், கோயில்கள் தரிசனத்திற்கு செல்லும் வகையில் போடி -- சென்னை ரயிலை அரக்கோணத்தில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றனர்.