/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கவுமாரியம்மன் கோயில் கம்பத்திற்கு பக்தர்கள் தண்ணீர் ஊற்றி வழிபாடு
/
கவுமாரியம்மன் கோயில் கம்பத்திற்கு பக்தர்கள் தண்ணீர் ஊற்றி வழிபாடு
கவுமாரியம்மன் கோயில் கம்பத்திற்கு பக்தர்கள் தண்ணீர் ஊற்றி வழிபாடு
கவுமாரியம்மன் கோயில் கம்பத்திற்கு பக்தர்கள் தண்ணீர் ஊற்றி வழிபாடு
ADDED : ஜூலை 06, 2024 05:54 AM

பெரியகுளம் : பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவிற்காக நடப்பட்ட கம்பத்திற்கு ஏராளமான பக்தர்கள் தண்ணீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர்.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா ஜூலை 8ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. ஜூலை 16 மாவிளக்கு, ஜூலை 17ல் அக்னிசட்டி, ஜூலை 23ல் மறுபூஜை நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு ஜூலை 2 ல் கம்பம் நடப்பட்டது. கம்பத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஏராளமானோர் குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
நேற்று கம்பம் நடப்பட்டு முதல் வாரம் வெள்ளிக்கிழமை மற்றும் ஆனி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றுங்கள்: திருவிழாவையொட்டி தினமும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
கோவில் முன்பும், அதனை சுற்றியுள்ள இடங்களில் கடைகளையும், வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.
கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம், போலீசார் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.