/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனு தாக்கலில் இன்ஸ்பெக்டரை தள்ளி சென்ற தினகரன் வாகனம்
/
மனு தாக்கலில் இன்ஸ்பெக்டரை தள்ளி சென்ற தினகரன் வாகனம்
மனு தாக்கலில் இன்ஸ்பெக்டரை தள்ளி சென்ற தினகரன் வாகனம்
மனு தாக்கலில் இன்ஸ்பெக்டரை தள்ளி சென்ற தினகரன் வாகனம்
ADDED : மார் 28, 2024 12:37 AM

தேனி:தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய பா.ஜ., கூட்டணி அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் வந்த பிரசார வாகனம், போலீசார் அமைத்த இரும்பு தடுப்புகளை மீறி உள்ளே நுழைந்ததால், அதனை தேனி இன்ஸ்பெக்டர் உதயகுமார் தடுத்தார். இன்ஸ்பெக்டரை 20 மீ., துாரத்திற்கு வேன் தள்ளி சென்றது.
தேனி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் மதியம் 2:00 முதல் 3:00 மணிக்குள் மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது.
இதற்காக, தேனி அன்னஞ்சி விலக்கில் இருந்து அ.ம.மு.க., -- பா.ஜ., - அ.தி.மு.க., தொண்டர்கள்உரிமை மீட்பு குழு மற்றும் கூட்டணி கட்சியினர் 60 வாகனங்களில் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர்.
மதுரை ரோடு எஸ்.பி., அலுவலகம் அருகே தடை செய்யப்பட்ட பகுதி என 100 மீ., இடைவெளியில் பேரிகார்டு அமைத்து தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.
தினகரன் பிரசார வாகனம் தடுப்பை கடந்து வந்த போது, போலீசார் தடுத்து பிரசார வாகனத்தை உள்ளே நுழைய அனுமதி மறுத்தனர். இதை மீறி உள்ளே சென்ற தினகரனின் பிரசார வாகனத்தை அங்கு பாதுகாப்பில் இருந்த, தேனி இஸ்பெக்டர் உதயகுமார் தடுத்தார். இன்ஸ்பெக்டர் கையால் தடுக்க தடுக்க அவரை 20 மீட்டர் துாரம் வேன் தள்ளி சென்றது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன், வாகனம் ஓட்டிய டிரைவர், அவரது ஆதரவாளர்கள் மீது, தேனி பறக்கும் படை அலுவலர் பரிந்துரையில் வழக்குப்பதிவு செய்ய ஆலோசித்து வருகின்றனர்.